பிரதான செய்திகள்

சாலியை கைது செய்ய வேண்டும்! புர்காவுக்கு எதிரான அமைச்சர்

தேசிய ஒற்றுமை முன்னணியின் தலைவர் அசாத் சாலியை கைது செய்ய வேண்டுமென தெரிவித்துள்ள அமைச்சர் சரத் வீரசேகர, அசாத் சாலி மத அடிப்படைவாதக் கருத்துக்களைத் தெரிவித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதுத் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், “அசாத் சாலியை நிச்சியமாகக் கைது செய்ய வேண்டும். அவர் மத அடிப்படைவாதக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

மத அடிப்படைவாதமே பின்னர் பயங்கரவாதமாக உருவாகிறது. ஷரீயா சட்டத்தின் செயற்பட வேண்டுமென்றால் அவர் சவுதி அரேபியாவுக்கே செல்ல வேண்டும். இலங்கையில் இருக்க வேண்டுமென்றால், இலங்கையின் சட்டத்திட்டங்களுக்குட்பட்டே வாழ வேண்டும். 

இலங்கையிலிருந்துக் கொண்டு ஷரீயா பற்றி பேச முடியாது. எனவே அவரைக் கைது செய்து, அவருக்கு எதிரான சட்டநடவடிக்கை எடுக்கப்படும். அசாத் சாலி தொடர்பில் சிஐடிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.” என்றார்.

Related posts

பொதுமக்களிடம் உதவி கோரும் மாவட்ட செயலகங்கள்

wpengine

நாடு கடத்த வேண்டாம் என ரோஹிஞ்சாக்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை

wpengine

வவுனியா,பட்டாணிச்சூர் பகுதியில் வாகன விபத்து! மூவர் வைத்தியசாலை

wpengine