பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

யாழ் உதவி முகாமையாளர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்

யாழ்ப்பாணம் நல்லூரில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் வங்கி ஒன்றின் கன்னாதிட்டிக் கிளை உதவி முகாமையாளர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டையிழந்து வீதியைவிட்டு விலகி மதிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மின்தடை காரணமாக வீதியில் இருள் சூழ்ந்திருந்ததால் அவரை அவசரமாக மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்க முடியாமல் போனதால் அதிக குருதிப்போக்கால் உயிரிழந்துள்ளார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் இன்று இரவு 8.45 மணியளவில் நல்லூர் வீரமாகாளி அம்மன் வீதியில் இடம்பெற்றது.

சம்பவத்தில் பருத்தித்துறையைச் சேர்ந்தவரும் நல்லூரில் வசிப்பவருமான சிறிஸ்கந்தராஜா பகீரதன் (வயது-40) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

ஆட்டமிழக்கச் செய்யும் அரசியல் சிந்தனைகள்;சிறுபான்மை அணிகள் சாதிப்பது எவ்வாறு?

wpengine

தாஜுடின் கொலை! அனுர சேனாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்!

wpengine

மன்னாரில் இருந்து கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலை முருங்கணில் சிக்கியது .

Maash