பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

குடும்ப பிரச்சினை கிணற்றிற்குள் குதித்த தாய் 2 பிள்ளைகள் மரணம்

கிளிநொச்சி – தர்மபுரம், இராமநாதபுரம் பகுதியில் தனது மூன்று பிள்ளைகளுடன் தாயொருவர் கிணற்றிற்குள் குதித்ததில் பிள்ளைகள் மூவரும் உயிரிழந்துள்ளனர்.

குடும்ப பிரச்சினை வலுப்பெற்றமையால் குறித்த தாய் கடந்த (03) மாலை கிணற்றில் குதித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

தாயையும் இரண்டு வயது குழந்தையையும் பிரதேச மக்கள் கிணற்றிலிருந்து மீட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் குழந்தை உயிரிழந்துள்ளது.

05 மற்றும் 08 வயதான இரண்டு பிள்ளைகள் கிணற்றின் ஆழத்தில் சிக்கியிருந்த நிலையில் கடற்படையினரால் சடலங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சிறார்களின் சடலங்களும் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நாட்டின் பிள்ளைகள் ஆங்கில, தகவல் தொழில்நுட்ப கல்வியின் அவசியத்தை உணர்ந்து கற்க வேண்டும்!-ஹம்மாந்தோட்டையில் சஜித்-

Editor

நாளைய தினம் ஊரடங்கு வதந்திகளுக்கு ஏமாற வேண்டாம்

wpengine

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹானை கைது செய்ய உத்தரவு!

Maash