பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முசலிக்கான விளையாட்டு மைதானம் மஸ்தானின் சுயநல முடிவு! தவிசாளர் சீற்றம்

மன்னார்-முசலி பிரதேசத்திற்கான அபிவிருத்தி குழுக்கூட்டம் இன்று காலை முசலி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


இதன் போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,அபிவிருத்தி குழு தலைவருமான கே.மஸ்தானும் கலந்துகொண்டார். கே.மஸ்தானின் சுயநல அரசியல் முடிவினால் குழப்பநிலை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


விளையாட்டுத்துறை அமைச்சினால் பிரதேசத்திற்கு ஒரு விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்ட போது முசலி பிரதேசத்தை பற்றி மஸ்தான் யோசிக்காமல் தன்னுடைய அரசியல் இருப்பீனை தக்கவைத்துக்கொள்ளவும்,பிரதேச சபை தொடர்பான சரியான சட்ட திட்டங்களை முழுமையான அறிவின்மையினால் விளையாட்டு மைதானம் தொடர்பான விடயத்தில் சுயநலமாக நடந்துகொண்டுள்ளார் எனவும் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


முசலி பிரதேச சபை நிர்வாகம் மரிச்சுக்கட்டி பகுதியில் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்ட போது கே.மஸ்தான் நரி தந்திரத்தினால் புதுவெளி கிராமத்தில் அமைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்.


இந்த புதுவெளி பகுதி நீர்தேங்கி இருக்கக்கூடிய பகுதியாக காணப்படுகின்றது.


இதில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டுமென்றால் நீர்பாசன திணைக்களத்தில் அனுமதியினை பெறவேண்டும் அவ்வாரான அனுமதி பெறபட்டுள்ளதா? என்ற கேள்வி கூட எழுந்துள்ளது.


இது தொடர்பில் முசலி பிரதேச சபையின் தவிசாளர் சில கேள்விகளை கேட்டபோது கே.மஸ்தானின் கூலிப்படை எழுத்தாளர்கள் தவிசாளர் மீது வீண்பழிகளை சுமத்தி முகநூலில் போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதை காண முடியும்.


முசலி பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டத்திற்கு மஸ்தானினால் ஏனைய பகுதியில் உள்ள அரசியல் அடியாட்களை அழைத்து வரப்பட்டுள்ளார்கள்.


கே.மஸ்தானின் இந்த நடவடிக்கையினால் பிரதேச மக்களுக்கு தேவையான பிரச்சினைகளுக்கு தீர்வினைபெற்றுக்கொள்ள முடியவில்லை என சமூக மட்ட அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த மஸ்தானின் கடும்போக்கு நடவடிக்கையினை முசலி பிரதேச மக்கள் வண்மையாக கண்டிக்ககூடும்.

Related posts

வட மாகாண சபைக்கு முதலமைச்சராக  விக்னேஸ்வரன் பதவி வகிக்க வேண்டும்-கே.காதர் மஸ்தான்

wpengine

கல்முனை ஹுதாப் பள்ளியில் விசேட மார்க்க சொற்பொழிவு

wpengine

Dr. Kelegama to Speak on the State of the Economy

wpengine