பிரதான செய்திகள்

இரணைத்தீவில் நல்லடக்கம் ஓர் இராஜதந்திர நகர்வை, அரசாங்கம் மேற்கொள்கின்றது’

இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தாது, முஸ்லிம்களின் விருப்பப்படி  ஜனாஸாக்களை மையவாடிகளிலேயே அடக்கம் செய்யுங்கள் எனத் தெரிவித்துள்ள யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், முஸ்லிம்களின் கோரிக்கைகளுக்குச் செவிமடுக்காது, தமிழ், முஸ்லிம்களின் ஒன்றுமையைச் சிதைப்பதற்கே அரசாங்கம் முயற்சிக்கின்றது என்றார். 


‘மையவாடியில் இடங்கள் இருக்கின்றன. அதில் அடக்கம் செய்யுங்கள் என, அரச தரப்பினருக்கு பல்வேறு கோரிக்கைகளை முஸ்லிம் தரப்பின் முன்வைத்துள்ளனர். அதனை இலங்கை அரசாங்கம் செவிமடுப்பதே இல்லை’ என்றார்.

‘கிறிஸ்தவர்கள் கூடுதலாக வாழுகின்ற தமிழ் மக்களுடைய ஒரு தனித் தீவாக, கிளிநொச்சி மாவட்டத்தில்  இருக்கின்ற இரணைத்தீவு பகுதியில் நல்லடக்கம் செய்வதற்கு ஓர் இராஜதந்திர நகர்வை, அரசாங்கம் மேற்கொள்கின்றது’ என்றார். 

‘எங்களைப் பொறுத்தவரைக்கும்  ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட வேண்டும்; ஜனாஸாக்கள் எரிக்கப்படக்கூடாது. இன்றும் பல ஜனாஸாக்கள் குளிரூட்டப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றன’ எனத் தெரிவித்த அவர், முஸ்லிம்களின் விருப்பப்படி, மையவாடிகளில் அடக்கம் செய்யலாம். ஆனால், இந்த விவகாரத்துக்கான முடிவு, இன்னோர் இனத்தைக் கிண்டி விட்டு, முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதாக அமையக்கூடாது என்றார். 

Related posts

தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணில் விக்ரமசிங்கவின் செல்லப்பிள்ளைகளாக மாறியுள்ளனர்கள்

wpengine

ஞானசாரர் மீது கை வைத்தால் நடப்பது வேறு, நாடே கொந்தளிக்கும்

wpengine

அளுத்கம இனக்கலவரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டும்;ஹிஸ்புல்லாஹ்

wpengine