தாய்லாந்தில் இடுப்புப் பகுதியில் இணைந்து தம்மிடைய இரு கால்களை பங்கீடு செய்த நிலையில் ஒட்டிப் பிறந்த அபூர்வ 7 வயது இரட்டைச் சகோதரிகள், தாமாக கைகளையும் கால்களையும் பயன்படுத்தி நடமாடவும் ஆடை அணியவும் மாடிப் படிகளில் வேகமாக ஏறி இறங்கவும் முச்சக்கரவண்டியை செலுத்தவும் கற்றுக் கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர்.
பாங்கொக்கின் வடக்கே சுமார் 250 கிலோமீற்றர் தொலைவிலுள்ள நகொன் ஸவான் என்ற பிராந்தியத்தில் வாழும் பின் மற்றும் பான் ஆகிய இந்த சிறுமிகள் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் நேற்று முன் தினம் செய்திகளை வெளியிட்டுள்ளன.
அந்த சிறுமிகளை பிரிக்க முடியும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில், அவர்களோ தொடர்ந்து பிரியாது ஒன்றிணைந்து இருக்கவே விருப்பம் தெரிவித்துள்ளமை குறிப்பி டத்தக்கது.