Breaking
Mon. Nov 25th, 2024

இலங்கை – கொழும்பில் தலை துண்டாக்கப்பட்டு பயணப்பையில் அடைக்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார். சந்தேகநபர் தற்கொலை! தொடர்பான விறுவிவிப்பான தகவல்கள்.

கொழும்பு – டாம் வீதியில் பயணப் பையில் கண்டெடுக்கப்பட்ட தலையில்லாத பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது..

அதன்படி குறித்த சடலம் குருவிட்ட – தெப்பனாவ பகுதியில் வசிக்கும் 30 வயதுடைய திருமணமாகாத பெண்ணுடையது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை குறித்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபராக புத்தளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 52 வயதுடைய ஓய்வுபெற்ற துணை பொலிஸ் அதிகாரி காணப்படுகின்றார்.

எனினும் குறித்த சந்தேகநபரும் இன்று தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை உயிரிழந்த பெண்ணின் மாதிரிகள் டி.என்.ஏ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சி.சி.டி.வி காட்சிகள் மூலம் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் நடத்திய விசாரணைகளில் மேலும் பல தகவல்கள் வெளியாகின.

அதாவது காணொளியில் காணப்படும் குறித்த நபர் பெண் ஒருவருடன்
ஹங்வெல்ல பகுதியில் உள்ள ஒரு விடுதிக்கு நடந்து செல்வதை அவதானிக்க முடிந்துள்ளது.

எனினும், அந்த நபர் விடுதியிலிருந்து பயணப் பையுடன் வெளியேறி 143 மார்க்க ஹங்வெல்ல – புறக்கோட்டை பேருந்தில் ஏறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து மேற்கொண்ட விசாரணையில், சந்தேகநபர் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றும் ஒரு துணை பொலிஸ் அதிகாரியாவார். மேலும் படல்கும்புர பகுதியில் வசிப்பவர் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் சந்தேகநபரான புத்தளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 52 வயதுடைய ஓய்வுபெற்ற துணை பொலிஸ் அதிகாரியும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் படல்கும்புர, ஐந்தாம் கட்டை பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு அருகில்
காட்டுப் பகுதியில் மரத்தில் தொங்கிய நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

மேலும் சடலத்தின் அருகே விஷ போத்தலும் கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் அவர் விஷத்தை உட்கொண்டு பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *