பிரதான செய்திகள்

பரீட்சைக்காக இன்று திறந்திருக்கும் ஆட்பதிவு திணைக்களம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் கிளை அலுவலகங்கள் சிலவற்றை இன்றைய தினம் (26) திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்று காலை 8.30 மணி தொடக்கம் பகல் 1 மணி வரை அலுவலகங்களை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம், வவுனியா, மட்டக்களப்பு, காலி மற்றும் குருநாகல் ஆகிய கிளை அலுவலகங்களிலும் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் கூறியுள்ளார்.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கான தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்காக நாளைய தினம் இந்த அலுவலகங்கள் திறக்கப்படவுள்ளன.

பாடசாலை அதிபர் அல்லது கிராம சேவையாளர்களால் உறுதிப்படுத்தப்பட்ட முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய அலுவலகங்களில் சமர்பிப்பதனூடாக தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் என ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

Related posts

அநுராதபுரம் – ஓமந்தை ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!

Editor

முதல் தடவையாக மன்னாரில் ஆசிரியர் மாநாடு

wpengine

யாழ். தும்பளை கடற்கரைப் பகுதியில் 300 கிலோ கிராம் கேரளக் கஞ்சா மீட்பு..!

Maash