Breaking
Fri. Nov 22nd, 2024
மட்டக்களப்பு கெம்பஸில் அமைக்கப்படவிருக்கின்ற இலங்கையின் மிகப்பிரமாண்டமான அதி நவீன வசதிகளுடன் கூடிய வாசிகசலைக்கான அடிக்கல் மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு கெம்பஸின் தலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் இன்று அடிகல்நட்டி வைக்கப்பட்டது.

365 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள மேற்படி வாசிகசாலையில் சுமார் 3000 மாணவர்கள் இருந்து தங்களுடைய நூலக வசதிகளை,  புதிய தொழில்நுட்பத்திற்கமைவாக சர்வதேச பல்கலைக்கழகங்களோடு இணைந்து படிக்கக் கூடிய வகையில் அமைக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கருத்துத் தெரிவிக்கையில், “சுமார் 18 மாதங்களுக்குள் இந்த வாசிகசாலை கட்டி முடித்து மாணவர்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.547fa3ef-5ccf-40a1-8d4a-d3193e6a242b
இந்த வாசிகசாலை அமைக்கப்பட்டதும் இலங்கையிலேயே அதி கூடிய மாணவர்கள் ஒரே நேரத்தில் கல்வி கற்கக் கூடிய நவீன தொழில்நுட்பத்தோடு கூடிய ஒரு வாசிகசாலையாக இது திகழும்” என்றார். 570fa639-054a-44d4-b99a-ee50d1f6aef3
இந்நிகழ்வில் மட்டக்களப்பு கெம்பஸினுடைய முகாமைத்துவப் பணிப்பாளர் பொறியியலாளர் ஹிறாஸ் ஹிஸ்புல்லாஹ் , ஆளுனர் சபை உறுப்பினர் டாக்டர் பிரபாத் உக்குவத்த மற்றும் பொறியியலாளர்கள்,தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *