பிரதான செய்திகள்

24 மணித்தியாலங்களுக்கு அனைத்து இறுதி சடங்குகளையும் நிறைவு

24 மணித்தியாலங்களுக்கு அனைத்து இறுதி சடங்குகளையும் நிறைவு செய்தல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் புதிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் நேற்று (15) இரவு கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் திருமண நிகழ்வுகள் மற்றும் ஏனைய விழாக்களில் கலந்து கொள்ள இதுவரையில் 150 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததுடன் அதனை 50 ஆக மீண்டும் குறைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மற்றும் இரவு நேர களியாட்டங்கள் தொடர்பில் விஷேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் அது தொடர்பில் எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள் கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

வரவு,செலவு திட்டம் இலங்கையை சோமாலியாவாகவே மாற்றும் – சஜித்

wpengine

இராஜாங்க அமைச்சுகளுக்கான இரு புதிய செயலாளர்கள் நியமனம்.

wpengine

இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த வவுனியா காணி மக்களிடம்

wpengine