பிரதான செய்திகள்

எருக்கலம்பிட்டி ஊசிமூக்கன்துறை வீதி புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்தார் டெனிஸ்வரன்

(ஊடகபிரிவு)
வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் 2016 ஆம் ஆண்டுக்கான மாகாண அபிவிருத்தி நன்கொடையின் (PSDG) கீழ் 04 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் மாவட்ட, மன்னார் பிரதேச செயலக பிரிவிற்க்குட்பட்ட எருக்கலம்பிட்டி ஊசிமூக்கன் துறை வீதியின் வேலைத்திட்டத்தை           நேற்று 29-04-2016 வெள்ளி காலை 10.00 மணியளவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன்.

நிகழ்விற்கு எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் மௌலவி, வடக்கு மாகாண சபையின் மன்னார் மாவட்ட உறுப்பினர் எச்.முகம்மது ரயீஸ், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் டி.சிவராஜலிங்கம், வீதி அபிவிருத்தித் திணைக்கள மன்னார் வவுனியா மாவட்ட பிரதம பொறியியலாளர் ரகுநாதன், மன்னார் மாவட்ட நிறைவேற்றுப் பொறியியலாளர் எம்.துசியந், மற்றும் அக்கிராமத்து அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.ff742164-288f-4aee-ac19-51da596c867c

Related posts

நீர்க்கட்டணமும் அதிகரிக்கிறது!

Editor

சமையல் எரிவாயுடன் சம்பந்தப்பட்ட 458க்கும் அதிகமான வெடிப்புச் சம்பவங்கள்-சஜித்

wpengine

சதொச சீனி கொள்கலனில் கொக்கேய்ன்

wpengine