Breaking
Sat. Nov 23rd, 2024

இரு­ப­துக்கு 20 கிரிக்­கெட்டில் டொபாகோ வீரர் ஈராக் தோமஸ் 21 பந்­து­களில் அதி­வேக சதம் அடித்து, மேற்கிந்­தியத் தீவுகள் வீரர் கிறிஸ் கெய்லின் சாத­னையை முறிய­டித்­துள்ளார்.

கரீ­பியன் தீவு நாடு­களில் ஒன்­றான டிரி­னிடாட் டொபாகோவில் அந்­நாட்டு கிரிக் கெட் நிறு­வகம் சார்பில் உள்ளூர் அணி­க­ளுக்கு இடை­யே­யான இ–20 போட்டி நடத்­தப்­ப­டு­கி­றது. இதில்,நடந்த போட்­டியில் ஸ்கார் ­போரோக் மேசன் ஹால் அணியும், ஸ்பைசைட் அணியும் மோதின. முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய ஸ்பைசைட் அணி 152 ஓட்­டங்­களை இலக்­காக நிர்­ண­யித்­தது.

அடுத்து துடுப்­பெ­டுத்­தா­டிய ஸ்கார்­போரோக் அணியின் 23 வய­தான தோமஸ், தான் சந்­தித்த அனைத்து பந்­து­க­ளையும் விளாசித் தள்­ளினார்.

இவர் 21 பந்­து­களில் சதம் அடித்து உலக சாதனை படைத்தார். 8 ஓவர்­களில் ஸ்கார்­போரோக் அணி 152 ஓட்ட இலக்கை எட்டி வென்­றது. தோமஸ் ஆட்­ட­மி­ழக்­காமல் 31 பந்துகளில் 131 ஓட்­டங்­களைக் குவித்தார். இதில் 15 சிக்­ஸர்கள், 4 பவுண்­ட­ரிகள் அடங்கும். இதன் மூலம், இ–20 கிரிக்கெட் வர­லாற்றில் கிறிஸ் கெய்லின் சாதனை முறி­ய­டிக்­கப்­பட்­டுள்­ளது. ஐ.பி.எல். தொடரில் பெங்­களூர் அணிக்­காக விளை­யாடும் கிறிஸ் கெய்ல், புனே அணிக்கு எதிராக 30 பந்துகளில் சதம் அடித்ததே அதிவேக சதமாக இருந்தது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *