பிரதான செய்திகள்

சிறுபான்மை மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்

மக்கள் காங்கிரஸ் கருவுடன் சந்திப்பு!

ஊடகப்பிரிவு-

நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரியவை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்கள், கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமையில்,  இன்று (01) சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்போது, நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கம், கடந்த காலங்களில் சிறுபான்மையினருக்கு இடம்பெறும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருவதற்காகவும், விசேடமாக முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விடயத்தில் எதிர்ப்பினை வெளியிட்டமைக்கும், அவ்வமைப்புக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர்.

அத்துடன், சிறுபான்மை சமூகம் தற்போது எதிர்நோக்கியுள்ள காணிப் பிரச்சினை, இராணுவமயமாக்கல் போன்ற இன்னோரன்ன பல பிரச்சினைகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தினர்.

இந்த சந்திப்பில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், கட்சியின் தவிசாளர் அமீர் அலி, செயலாளர் எஸ்.சுபைர்தீன், சிரேஷ்ட பிரதித் தலைவர் சஹீட் மற்றும் பொருளாளர் ஹுசைன் பைலா ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related posts

ஞான­சார தேரருக்கு எதி­ராக மூன்று முறைப்­பா­டுகள்! சட்டதரணி சிறாஸ் நுார்டீன்

wpengine

லண்டன் தாக்குதல்: அறுவர் பலி, இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

wpengine

குற்றங்களை ஒப்புக்கொண்டு விக்னேஸ்வரன்

wpengine