ஒரு ஹெக்டேயருக்கும் அதிக பரப்பில் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள், அரச கையிருப்பிற்குத் தேவையான நெல்லை வழங்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நெல் விநியோக சபை கோரிக்கை விடுத்துள்ளது.
பெரும்போக நெல் கொள்வனவு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெல் விநியோக சபையின் உப தலைவர் துமிந்த பிரியதர்ஷன தெரிவித்துள்ளார்.
சம்பா மற்றும் கீரி சம்பா நெல்லை கிலோ 52 ரூபாவிற்கும், ஒரு கிலோ நாட்டரிசி நெல்லை 50 ரூபாவிற்கும் நெல் விநியோக சபையினால் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்ய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இம்முறை நெல் கொள்வனவிற்காக அரசாங்கத்தினால் 16 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
3 இலட்சம் மெட்ரிக் தொன் நெல் களஞ்சியத்தைப் பேணிச் செல்வதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் நெல் விநியோக சபையின் உப தலைவர் துமிந்த பிரியதர்ஷன குறிப்பிட்டுள்ளார்.