பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் – எருக்கலம்பிட்டி கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் – எருக்கலம்பிட்டி கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த கிராமத்தில்  46 குடும்பங்களைச் சேர்ந்த 179 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, மன்னார் மாவட்டச் செயலாளர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், மன்னார் நகரில் புதன்கிழமை (06) மதியம் சுமார் 200 பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன எனவும் குறித்த பி.சி.ஆர்.பரிசோதனைகளின் முடிவுகள் இரண்டு தினங்களில் கிடைக்கும் எனவும் கூறினார்.
அதனை தொடர்ந்தே மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியுமென்றார்.

Related posts

அரசாங்கம் ஒரு செங்கலை கூட எடுத்து வைக்கவில்லை.

wpengine

ஒரு மில்லியனை எட்டிய கணினிமயமாக்கப்பட்டுள்ள கைரேகைகள்..!

Maash

ஹக்கீம்,றிசாட் கீரைக்கடை அரசியல்

wpengine