பிரதான செய்திகள்

உளநலம் மருந்து அதிகபாவனை சிறையில் வெட்டிகொலை

மருந்தினை பயன்படுத்திய பின்னர் மஹர சிறைச்சாலை கைதிகள் சுயஉணர்வற்ற நிலையில் காணப்படுவதை காணொளிகள் காண்பித்துள்ளன என அமைச்சர் வீரவன்ச தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றில் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
மருந்தினை உட்கொண்ட கைதிகள் தங்களை வெட்டிக்கொண்டனர் தங்களுக்குள் மோதிக்கொண்டனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


உளநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான மருந்தினை பெருமளவில் பயன்படுத்தியதாலேயே இந்த நிலையேற்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.


உளநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருந்து ஏன் சிறைச்சாலைக்குள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது என்பது குறித்த விசாரணைகள் அவசியம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


மஹர சிறைச்சாலையில் கடந்த நவம்பர் 29 ஆம் திகதி மோதல் நிலை ஏற்பட்டிருந்தது.


இந்த சம்பவத்தின் போது 11 கைதிகள் கொல்லப்பட்டதுடன், 117 கைதிகள் காயமடைந்தனர். இதில் இரண்டு சிறைக் காவலர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

World Islamic Conference President mythreepala Sirisena participated

wpengine

தேர்தல் இல்லாட்டி இராஜினமா

wpengine

கூகுள் மற்றும் பேஸ்புக் தொடர்பில் ஆஸ்திரேலியாவில் புதிய சட்டம்

wpengine