பிரதான செய்திகள்

சஜித் அணியில் இருந்து 3பேர் மஹிந்த அரசு பக்கம்

ஐக்கிய மக்கள் சக்தியிலுள்ள மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் அரசுடன் இணைந்து கொள்ளவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹேசா வித்தானகே, சமிந்த விஜேசிறி மற்றும் மயந்த திஸாநாயக்க ஆகியோரே அரசுடன் இணையவுள்ளனர் என்று அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் எம்.பி டயனா கமகே தெரிவித்துள்ளார்.


இதற்கான ஆயத்தங்களை ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க முன்னெடுத்து வருகின்றார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


சிங்களத் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

Related posts

மன்னாரில் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு வீட்டுத் தோட்டங்கள் செய்வதற்கான நடவடிக்கைகள்-ஐ.அலியார்

wpengine

கடற்படை சிப்பாய் தாக்குதல்! அரிப்பு கிராமத்தில் உள்ள ஆறு பேருக்கு விளக்கமறியல்

wpengine

சாதாரண தர பரீட்சையில் கணிதப்பாடத்தினை கட்டாயபடுத்த வேண்டும்-விமல் ரத்நாயக்க

wpengine