பிரதான செய்திகள்

மதுஷ்வின் 100கோடி மற்றும் வாகனம் எங்கே?

போதைப்பொருள் உலகின் மாகந்துரே மதுஷ் டுபாயில் இருந்த போது பல்வேறு முறையில் சம்பாதித்த 100 கோடி ரூபாய் பணம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.


குறித்த பணம் வேறு 7 பேரின் கணக்கில் உள்ளதாக பாதுகாப்பு பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளது.


அந்த பணம் பெற்றுக் கொண்ட மற்றும் பெற்றுக் கொள்ளும் நபர்கள் தொடர்பில் தற்போது தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்ய கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


போதைப் பொருள் ஊடாக சம்பாதித்த பணத்தில் அவர் கொள்வனவு செய்த பல வாகனங்கள் இலங்கையில் 9 பேரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இது தொடர்பிலும் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.


கடந்த வாரம் சிறையில் இருந்த மாகந்துரே மதுஷை பொலிஸார் அழைத்து சென்ற வேளையில் ஏற்பட்ட மோதல் காரணமாக மதுஷ் சுட்டுக் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

வெளிநாட்டில் தலைமறைவாகி நாட்டில் திட்டமிட்ட குற்றச் செயல்களை ஒழுங்குபடுத்தும் 68 பேர் அடையாளம்.!

Maash

Breaking News : பசில் ராஜபக்ஷ கைது

wpengine

அமைச்சர் தெரிவிக்கும் கருத்துக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை

wpengine