மூன்று தசாப்த கோர யுத்தத்தில் வடக்கில் பிரிந்து கிடந்த தமிழ்,முஸ்லிம், சிங்கள சமூகங்களுக்கிடையில் அஇமகா எனும் அரசியல் தாபனத்தினூடாக இன ஐக்கியத்துக்கு வழிகாட்டிய கௌரவத் தலைவர் றிஷாட் பதியுதீன் ஊடாக அரசு பயனடைய வேண்டும்.
வடக்கில் தெற்குத் தலைமைகள் மீது நம்பிக்கை இழந்த தமிழ் பேசும் சமூகத்தின் அபிவிருத்திப் பாலமாக இருந்து கடந்த பல வருடங்களாக அம்மக்களின் குறைகளை நிவர்த்தி செய்த தலைமையாகும்.
மனிக்பாம் முதற்கொண்டு வடக்கில் மேற்கொள்ளப்பட்ட துரித மீள் குடியேற்றத்திற்கு பல வெளிநாட்டு நிதி நிறுவனங்களையும், வட்டி இல்லாத கடன் உதிவகளையும் நம் நாட்டிற்குக் கொண்டு வந்து சேர்த்த சிறுபான்மைத் தலைமைகளில் முன்னால் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் வகிபங்கு பிரதானமானது.
கடந்த கால கைத்தொழில் அமைச்சில் தனக்குக் கீழால் கொண்டு வரப்பட்ட பல நிறுவனங்கள் நஷ்டத்திலேயே இயங்கியது. குறிப்பாக சதொச,கனியமணல் கூட்டுத்தாபனம்,சீனிக் கூட்டுத் தாபனம்,உப்பு கூட்டுத்தாபனம்,லக்ஷல மற்றும் காரியவள கூட்டுத் தாபனம் போன்றவை அவருடைய காலத்திலே இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றப்பட்டன.
ஏக காலத்திலே பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள்,பங்குச் சந்தையாளர்கள்,அரபு நாடுகளுடனான முதலீட்டு முயற்சிகள் போன்ற பல பொருளாதாரம் சார்ந்த விடயங்களை இந்நாட்டுக்கு கொண்டு வந்த மிகச் சிறந்த ஆளுமைதான் றிஷாட் பதியுதீன்.
தற்போதுள்ள அரசு தங்களின் பலவீனங்களையும்,மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திண்டாடுகின்ற இச் சூழலிள் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் மூலமாக பயனடைய முயற்சிக்க வேண்டும். மாறாக குறுகிய சிலரின் சிறுபிள்ளைத்தனமான அபிலாஷைகளுக்காக அவரைப் பலி தீர்க்கக் கூடாது என வேண்டிக் கொள்கின்றேன்.
இனவாதிகளைத் திருப்திப்படுத்தும் நோக்கத்தைக் கலைந்து வளமான நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் வளமிக்க எமது தலைமையின் உதவிகளைப் பெற்று அந்நியச் செலாவனியை அதிகரித்துக் கொள்ளுமாறு வறுமைப்பட்ட பிரதேச சபையின் தவிசாளராக எனது வேண்டுகோளை விடுக்கின்றேன்.