பிரதான செய்திகள்

அடக்கு முறைக்கெதிராக பல்கலைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கிழக்கு பல்கலைகழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மூன்றாம் வருட மாணவர்கள் இன்று பாரிய ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் கல்லடியிலுள்ள அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் முன்னாள் வீதியில் அமர்ந்திருந்து பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்விச்சுற்றுலா தாமதப்படுத்தப்படுவதாகவும் அடிக்கடி நிகழ்வுகள் நடைபெறுவதால் பாடங்கள் நடைபெறுவதில்லையெனவும் நிர்வாக அடக்குமுறை காரணமாக மாணவர்கள் சுதந்திரமாக செயற்பட முடியாதுள்ளதாகவும் ஆர்பாட்டகாரார்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸார் அதிகளவில் நிறுத்தப்பட்டிருந்தனர்.

Related posts

சஜித் அணிக்கு ஆப்பு வைத்த ரணில் அணி

wpengine

அரசாங்கத்தின் வேலை முஸ்லிம் பெண்களின் ஆடை,திருமண வயதெல்லையை மாற்றுதல்

wpengine

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலைக்கு அமைச்சர் றிசாத் விஜயம் தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை

wpengine