மன்னார் ஆயர் இல்லம் கொரோன அச்சம் காரணமாக முழுமையாக மூடப்பட்டுள்ளது ஆயர் இல்லத்திற்கான உட்செல்லும் அனுமதி மற்றும் வெளி செல்லும் அனுமதி அனைத்து நிறுத்தப்பட்டுள்ளது.
ஆகவே கொரோனா தொற்றாளர் ஆயர் இல்ல வளாகத்திற்குள் கட்டடப்பணியை மேற்கொண்டுவரும் நபராவார். இவர் வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்தவராகும்.
இந்த விடயத்தை மறைத்து பட்டித்தோட்டப்பகுதியில் கொரோனா நபர் அடையாளம் காணப்பட்டதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும், மேலதிய அரசாங்க அதிபரும் எதற்காக உண்மை நிலையை மறைக்கிறார்கள்?
கொரோனா தொற்று என்பது வேண்டுமென்று நிகழ்ந்தல்ல. நோயாளர் இனங்காணப்பட்டதும் குற்றமல்ல. மக்களுக்கு உண்மையை தெளிவுபடுத்தி கடந்த சில நாட்களில் ஆயர் இல்லப்பகுதிக்குச் சென்றவர்களை இனங்கண்டு பரிசோதனை செய்யவேண்டியது அவசியமாகும்.
இதை விடுத்து குறித்த இடத்தை குறிப்பிடாமல், பட்டித்தோட்டம் எனக் குறிப்பிடுவது முறையான வழிகாட்டுதல் இல்லை. அதிகாரிகள் இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைகளில் தெளிவாக மக்களுக்கு உண்மையைக் கூறுவதே சிறந்ததாகும்.
குறிப்பாக கட்டட நிர்மாண பணிகளை மேற்கொண்ட ஆயர் இல்லத்தில் கொரோன தொற்று அபாயம் காணப்படலாம் எனும் அச்சத்தில் முழு பகுதியும் முடக்கப்பட்டுள்ளதுடன் தனிமைபடுத்தல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது