(பாறுக் ஷிஹான்)
யாழ்ப்பாண பொதுமக்களுக்கு எதிராக யாரும் இனவாத் பேசவில்லை மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் யாழ் பிரதேச செயலாளருக்கு எதிராக அவர் பேசிய விதத்தினை சுட்டிக்காட்டியே அங்கிருந்தவர்கள் பேசினார்கள் என யாழ் மாநகர சபை முன்னாள் உறுப்பினரும் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர் மௌலவி பி.ஏ.எஸ் சுபியான் தெரிவித்தார்.
நேற்றைய தினம் (28) யாழ் மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் இனவாதம் பேசப்பட்டதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் பல ஊடகங்களிற்கு செய்திகளை அனுப்பி இருந்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய மௌலவி பி.ஏ.எஸ் சுபியான் குறித்த கூட்டத்தில் நான் மக்களின் பிரதிநிதியாக கலந்த கொண்டிருந்தேன்.
தற்போது சில ஊடகங்களில் மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் தனக்கு எதிராக கவும் முஸ்லீம் மக்களிற்கு எதிராகவும் முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன்.பாராளுன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்.மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோர் இனவாதம் மேற்கொண்டதாக செய்திகள் வெளிவந்தது.
ஆனால் நான் அங்கு பிரசன்னமாக இருந்த அதே வேளை இவ்வாறாக இனவாதம் ஒன்றும் அங்கு கதைக்க அவர்கள் முற்படவில்லை .மாறாக வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் யாழ் பிரதேச செயலாளருக்கு எதிராக அவர் பேசிய விதம் குறித்தும் சபையில் குறித்த மாகாண சபை உறுப்பினர்(அஸ்மீன்) பேச வேண்டிய ஒழுங்கையும் நாகரிகத்தையும் கடைப்பிடிக்கும் படியும் கேட்டுக் கொண்டனரே தவிர யாரும் அங்கு முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதம் பேசவில்லை. என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன்.
அத்துடன் மாகாண சபை உறுப்பினர் தற்போது அவர் மீது எழுந்துள்ள பல குற்றச்சாட்டுகளையும் ஊழல்களையும் மறைக்கும் பொருட்டு இவ்வாறான வேண்டத்காத செய்திகளை உண்மைக்கு புறம்பாக வெளிப்படுத்துகின்றார்.
என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன்.