பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவியில் இருந்து பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்னவை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிஸ் ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
குற்றவியல் விசாரணை திணைக்களம் அண்மையில் முன்னாள் அமைச்சர் றிசார்ட் பதியூதீனின் சகோதரர் ரியாஜ் பதியூதீனை விடுதலை செய்தமை தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்த ஜாலிய சேனாரத்ன, சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால், அவர் விடுதலை செய்யப்பட்டதாக கூறியிருந்தார்.
எனினும் ரியாஜ் பதியூதீன் கைது செய்யப்பட்ட போது அவருக்கும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு தொடர்பு இருப்பதற்கான தெளிவான சாட்சியங்கள் கிடைத்துள்ளதாக ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறு முன்னுக்கு பின் முரணான தகவல்களை வெளியிட்டதன் காரணமாக அவர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.