பிரதான செய்திகள்

அரசியல் மாற்றத்துக்காக சர்வதேச உதவிகளை நாடும் ஜே.வி.பி

நாட்டில் அடுத்தகட்ட அரசியல் மாற்றம் ஒன்றுக்கான வேலைத் திட்டங்களை முன்னெடுக்கும் வகையில் மக்கள் விடுதலை முன்னணி தமது சார்பு நாடுகளின் உதவிகளை நாடியுள்ளதாக தெரியவருகின்றது. 

அதேபோல் மேதினக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் சர்வதேச பிரதிநிதிகளின் வருகை தொடர்பிலும்  முன்னாயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாவும் கூறப்படுகின்றது.

மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் நகர்வுகளையும் நாட்டில் அடுத்தகட்ட அரசியல் மாற்றம் ஒன்றுக்கான ஆரம்ப வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் ஆரபிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் கூட்டணி ஆட்சியை மாற்றியமைக்கும் வகையில் மக்கள் விடுதலை முன்னணி தமது சர்வதேச பலத்தை பயன்படுத்த தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது சர்வதேச நாடுகளுக்கு பயணமாகியுள்ள ஜே.வி.பி யின் உறுப்பினர்கள் சர்வதேச அமைப்புகள், சர்வதேச மட்டத்தில் இயங்கிவரும் இலங்கைவாழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகள் மற்றும் அந்நாட்டு அரசியல் பிரதானிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

தமிழில் தேசிய கீதம்;அரசியலமைப்புக்கு முரணானது உயர் நீதிமன்றத்தில் மனு

wpengine

பாணின் விலை அதிகரிப்பிற்கான காரணம் நிதியமைச்சர் ரவி

wpengine

ராஜபக்ஷக்களின் எழுச்சியில் ஏக தலைமைகளின் அந்தஸ்து!

wpengine