திவுலபிட்டியவில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் கொரோனா கொத்தணி உண்மையா பொய்யா என்பது மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம் தெரிவித்துள்ளார்.
இன்றுவரையில் மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையை மூடி மறைப்பதற்காக கொரோனா பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளதாக மக்கள் சந்தேகிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை கொரோனா பரவல் குறித்து கூறும் போது அது குறித்து மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
எப்படியிருப்பினும் இது உண்மை என்றால் எதிர்கட்சி என்ற ரீதியில் அதனை கட்டுப்படுத்துவதற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதேபோன்று, தற்சமயம் நாட்டுக்குள் உண்மைக்கு புறம்பான நிலை உருவாகி வருவதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நேற்று முன்தினம் புத்தளம் பகுதியில் நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.