விடுதலைப் புலிகள் அமைப்பில் பிளவு ஏற்பட்ட காலகட்டத்தில், கருணா தரப்பில் இருந்த நூற்றுக்கணக்கான ஆயுதங்களை அபகரித்த இவர் அவற்றை பாதாள உலக கும்பலுக்கு விற்றதாகவும் குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன.
அத்தோடு அந்தப் பிளவின் காலங்களில் பல கருணா குழு உறுப்பினர்கள், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்த முக்கியஸ்தர்களை குருணாகலில் வசிக்கும் இவரது உறவினர் மூலமாக வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கும் காரியத்தையும் இவர் செய்ததாக மட்டக்களப்பில் உள்ள முஸ்லிம்கள் தெரிவிக்கின்றார்கள்.
நீண்ட காலமாக வெளிநாடு ஒன்றில் மறைந்து வாழ்ந்துவிட்டு அண்மைக்காலமாக கிழக்கிற்கு இவர் மீண்டும் வந்துள்ளதாகத் தெரியவருகின்றது.
அப்படிப்பட்ட அக்கீல் அர்சாத் ஒரு தமிழ் பிரதி அமைச்சருடன் நெருக்கமாக நிற்கும் புகைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
அதுவும் இந்தப் புகைப்படம் மிக அண்மையில் குறிப்பாக கொரோனா காலத்தில் எடுக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மிக மோசமான சமூகவிரோதச் செயல்களில் ஈடுபட்டதாக அந்தப் பிரதேச மக்களால் அடையாளம் காணப்பட்ட ஒரு ஆயுததாரியுடன் இந்த அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் ஒருவர் கொண்டிருக்கும் உறவு தொடர்பாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச நிச்சயமாக விசாரணைகளை மேற்கொள்வார் என்று மட்டக்களப்பு மக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்கள்.