Breaking
Sat. Apr 27th, 2024

மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கொக்குப்படையான் மீனவக் கிராமம் கடலரிப்பினால் மூழ்கும் நிலையில் உள்ளது எனவும், விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி குறித்த கிராம மக்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை (1) காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கடலரிப்பிற்கு தடுப்பு அனை அமைக்கக் கோரியே கொக்குப் படையான் கிராமத்து மக்கள் கொக்குப் படையான் கடற்கரைப் பகுதியில ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள கொக்குப் படையான் மீனவ கிராமங்கள் வேகமாக கடலரிப்பிற்கு உள்ளாகி வருகின்றது. இதனால் அப்பகுதி கிராமங்கள் கடலில் மூழ்கும் அபாய நிலையில் உள்ளது.உரிய அதிகாரிகள் கவனம் எடுத்து கடலரிப்பை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து அழியும் நிலையில் உள்ள கிராமத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் மீட்டுத் தருமாறு மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் மேலும் தெரிவிக்கையில்,,

கொக்குப்படையான் கிராம மக்களாகிய நாங்கள் கடற்தொழிலையே வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகிறோம். இப்பகுதி சமீப காலமாக 300 மீற்றருக்கும் மேல் கடலரிப்பிற்கு உள்ளாகியுள்ளதோடு, கடந்த 6 மாதங்களில் 45 மீற்றர் தூரம் கடலரிப்பிற்கு உள்ளானதை எமது கண்களினால் கண்டுள்ளோம்.

இப்பகுதி மக்களின் இருப்பு கேள்விக் குறியாகியுள்ள நிலையில் மிகவும் அவசரமாக இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளோம். இதனை ஜனாதிபதி பிரதமர் மற்றும் கடற்தொழில் அமைச்சர் மற்றும் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனமெடுத்து கடலரிப்பு ஏற்படும் பகுதிகளுக்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மக்கள் கோரிக்கை விடுத்தனர். 

அத்துடன் ஜனாதிபதி பிரதமர் மற்றும் கடற்தொழில் அமைச்சர் போன்றவர்களுக்கான அவசரக் கடிதத்தினை மக்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் பிரத்தேக செயலாளர் அன்ரன் டானியல் வசந்தன் அவர்களிடம் கையளித்துள்ளனர்.

மக்களின் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் பிரத்தியேக செயலாளர் அன்ரன் டானியல் வசந்தன், கொக்குப்படையான் பங்குத் தந்தை அருட்தந்தை டெஸ்மன் அடிகளார், மீனவ சங்கப் பிரதி நிதிகள் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் மற்றும் மீனவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *