இலங்கை தொழில் பயிற்றி அதிகார சபையில் கணனிப் பயிற்சிநெறியினை முடித்துக்கொண்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
இலங்கை தொழில் பயிற்றி அதிகார சபையில் கணனிப் பயிற்சிநெறியினை முடித்துக்கொண்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (2020/09/24) அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
அரச சேவையிலுள்ள உத்தியோகத்தர்களின் தொழில் திறனை மேம்படுத்தும் வகையில், அரசாங்கம் பல்வேறுபட்ட தொழில் பயிற்சித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
அரசாங்கத்தின் இவ்வேலைத்திட்டத்திற்கமைய, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான கணனி பற்றிய ஆரம்ப பயிற்சி நெறியினை, இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபை ஊடாக அண்மையில் வழங்கி இருந்தது.
‘வாழ்க்கைக்கு ஆற்றல், ஆற்றலுக்கு தொழில்’ எனும் தொனிப்பொருளில் இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபை பல்வேறுபட்ட முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருவதாக அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார்.
சமுகத்திலே, தொழில் தகைமை கொண்டவர்களாக, திறமையான ஊழியப்படையை கட்டியெழுப்பி சுபீட்சம் நிறைந்த நாடாக மாற்றுவது இதன் பிரதான குறிக்கோள்களின் ஒன்றாகவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் நிரவாக உத்தியோகத்தர் ஆர்.எம்.நழீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தொழில் பயிற்சி அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் இயந்திரி எம்.பி.நழீம், அதிகார சபையின் உத்தியோகத்தர் எம்.எம்.மஹ்சூம் மற்றும் சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் எம்.ஜே.எம்.நிஹ்மத்துல்லா, பட்டதாரி பயிலுனர்கள் கலந்து கொண்டனர்