வறுமைக்கோட்டில் வாழும் மக்களுக்கு அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள 100000 பேருக்கான வேலைவாய்ப்பில் திட்டத்தில் மன்னார் நகர் பகுதிக்கான வேலைவாய்ப்பு விடயத்தில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தானின் தலையீடுகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மன்னார் நகர பிரதேச செயலகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இராணுவத்தினால் நேர்முக தேர்வு நடைபெற்ற போது அதில் பலருடை திறமைகளும்,பரீட்சை பெறுபேறுகளும் மீளாய்வு செய்யப்பட்டு அவர்களுடைய வறுமை நிலையினையும் இராணுவத்தினர் நேரடியாக சென்று பார்வையிட்டார்கள்.
மன்னார் நகர பகுதியில் நேர்முக தேர்வில் தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்களை நீக்கிவிட்டு தன்னுடைய அரசியலுக்கு உதவி செய்த பலருடைய பிள்ளைகளின் பெயர்களை இணைத்துகொள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.எனவும் அறியமுடிகின்றன.
மன்னார் நகர பகுதியில் நேர்முக தேர்வில் தெரிவு செய்யப்பட்டவர்கள் மிகவும் கஷ்டத்தில் இருப்பதாகவும்,இவ்வாறான கிழ்தரமான திருவிளையாட்டுகளை காதர் மஸ்தான் செய்யக்கூடாது எனவும் கவலை தெரிவித்துள்ளார்கள்.
இந்த வேலைவாய்ப்பு விடயத்தில் சரியான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி செயலகம்,பிரதமர் மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர்கள்,நேர்முக தேர்வின் குழுவினர்,நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்டவர்கள் வேண்டுகோள்விடுத்துள்ளார்கள்.