பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் மாவட்ட செயலகத்தில்திருவள்ளுவர் விழா

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று திருவள்ளுவர் விழா இடம்பெற்றது.


மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் குறித்த விழா இடம்பெற்றது.


மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் திருவள்ளுவரை ஏந்தியவாறு பவனி இடம்பெற்றது.


முதலில் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் திருவள்ளுவரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்ததுடன், அதனைத் தொடர்ந்து திருவள்ளுவர் சிலையை ஏந்தியவாறு மாவட்டச் செயலகம் நோக்கி ஊர்வலம் இடம்பெற்றது.


இதன்போது நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.


குறித்த நிகழ்வில் அரசாங்க அதிபர்,மேலதிக அரசாங்க அதிபர்,பிரதேசச் செயலாளர்கள், மாவட்டச் செயலக அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அல்லாஹ் மீண்டும் பிறப்பார்”  ஞானசார தேரர் கூறுகிறார்-முன்னால் அமைச்சர் றிஷாட்

wpengine

25 இளவரசிகள், 100 அதிகாரிகள் சவுதி மன்னரின் சுற்றுப்பயணம்

wpengine

தொடர்ந்து இளைஞர்களை குறிவைக்கும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள! கடத்தி செல்லப்பட்ட 2 இளைஞர்களில் ஒருவர் பலி, மற்ருமொருவர் வைத்தியசாலையில்.

Maash