பிரதான செய்திகள்

கல்பிட்டி பகுதியில் 9கோடிக்கு மேல் தங்க கட்டிகள்

புத்தளம், கற்பிட்டியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட தங்கத்தின் பெறுமதி 9 கோடியே 53 லட்சத்து 636 ரூபாய் என இலங்கை சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.


இந்த தங்கம் பாலவிய பிரதேசத்தில் இருந்து கற்பிட்டி வரை மோட்டார் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட நிலையில் விசேட அதிரடிப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.


குறித்த தங்கம் 9 கிலோ 592 கிராம் நிறையுடையதெனவும், அவை அனைத்தும் 22 கரட்டிற்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த தங்கம் மிகவும் சூட்சுமமான முறையில் கடத்தப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

மன்னார் பகுதியில் பாதசாரிகளுக்கு இடையூரை ஏற்படுத்திய வர்த்தகர்கள் கைது!

wpengine

ரணிலுக்கு ஆதரவு வழங்க முன்னால் அமைச்சர் ஒருவர் தீர்மானம்

wpengine

வவுனியாவில் பார்வையாளர் மண்டபம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

wpengine