பிரதான செய்திகள்

பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம் ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நாளை

மட்டக்களப்பு, மண்முனைப்பற்று,  ஆரையம்பதி பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் மட்டு. மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவரும், ஆரையம்பதி பிரதேச அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நாளை நடைபெறவுள்ளது.

மண்முனைப்பற்று, ஆரயம்பதி பிரதேச செயலகத்தில் நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ள மேற்படி நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும், பிரதேச அபிவிருத்தி இணைத்தலைவர்களுமான அலி சாஹிர் மௌலானா மற்றும் சிறிநேசன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதுடன், மாகாண சபை உறுப்பினர்கள், திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர் என இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்புச் செயலாளர் றுஸ்வின் தெரிவித்தார்.

Related posts

தைபொங்கல் தினத்தில் வவுனியாவில் சோகம்

wpengine

யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் தெரிவின் முடிவு விரைவில்!

Editor

முசலி பிரதேச சபையின் 41 ஆவது அமர்வு முஜிப் ரஹ்மானின் கோரிக்கை

wpengine