பிரதான செய்திகள்

கிராம சேவையாளரை இடமாற்றம் செய்ய வேண்டாம்! உடனடியாக சென்ற பாராளுமன்ற உறுப்பினர்

வவுனியா – இராசேந்திரங்குளம் பகுதிக்கான கிராம சேவையாளரை இடமாற்றம் செய்ய வேண்டாம் என்று கோரி அப்பகுதி மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.


குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் இராசேந்திரங்குளம் கிராம சேவையாளர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.


இதில் கலந்து கொண்ட பொது மக்கள் கருத்து தெரிவிக்கையில், எமது பகுதிக்கான கிராம சேவையாளர் எமக்கு சிறப்பான சேவைகளை ஆற்றியுள்ளார்.


எனவே அவரை வேறுபகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டாம். மீண்டும் எமது கிராமத்திற்கே அவரை நியமிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.


இந்த நிலையில் குறித்த பகுதிக்கு சென்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் பொது மக்களுடன் கலந்துரையாடியதுடன், வவுனியா பிரதேச செயலாளருடனும் இது தொடர்பில் தொலைபேசியில் கலந்துரையாடிருந்தார்.


அதன் பிரகாரம் குறித்த கிராம சேவையாளரை இடமாற்றம் செய்வதை இடைநிறுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினரால் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய போராட்டம் நிறுத்தி கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

புதிதாக அமைச்சர்கள் மாறும் போது நாற்காலிகள் கொள்வனவு செய்வதற்கே பெருமளவு பணம்

wpengine

மாட்டிறைச்சி உணவுக்கடையை மூட உத்தரவிட்டதற்கு சீமான் கண்டனம்

wpengine

கோட்டாபய தலைமை இருந்தால் உறவு மேலும் அதிகரிக்கக்கூடும்

wpengine