பிரதான செய்திகள்

இராஜாங்க அமைச்சு தேவையில்லை! அமைச்சு பதவி தான் வேண்டும்.

புதிய அமைச்சரவையில் வழங்கப்பட்ட அமைச்சு பொறுப்பு ஏற்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வெளியேறிச் சென்றுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கான பதவிப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் கண்டி தலதா மாளிகையில் நேற்று நடைபெற்றது.

இதன்போது, 28 அமைச்சர்கள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொள்வர் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் பதவியேற்பு நிகழ்வில் 39 இராஜாங்க அமைச்சர்கள் மாத்திரமே பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

கல்வி இராஜாங்க அமைச்சுப் பதவி எவருக்கும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், கல்வி இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்பதற்குப் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தனக்கு ஒதுக்கப்பட்ட அமைச்சை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


விஜயதாச ராஜபக்ஷவுக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த அமைச்சு பதவியை கடுமையாக நிராகரித்துள்ள விஜயதாச ராஜபக்ஷ, தனக்கு பிரதான அமைச்சு பதவி ஒன்றை கோரியுள்ளார்.


இதனால் ஏற்பட்ட முரண்பாடுகளை அடுத்து தலதா மாளிகையிலிருந்து அவர் வெளியேறியுள்ளதாக குறித்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Related posts

“உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்“ திசை திருப்பும் யுக்தி பாதாள உலகக் குழுக்கள் மூலம் முன்னெடுப்பு .!

Maash

ஆயிரம் கனவுகளுடன் இல்லறத்தை தொடங்கிய இளம் ஜோடி

wpengine

அமெரிக்க ஜனாதிபதி தோ்தலில் முறைகேடு ஏற்றுக் கொள்ள மாட்டேன் டிரம்ப்

wpengine