பிரதான செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் 10 ஆம் திகதிக்கு முன்னர்

இம்முறை பொதுத் தேர்தலில் தேசிய பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர் பட்டியலை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு பெற்றுத்தருவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி இம்முறை பொதுத் தேர்தலில் 2,771,980 வாக்குகளை பெற்று 47 ஆசனங்களை கைப்பற்றியது.

அதன்படி, அவருக்கு தேசிய பட்டியலில் 7 ஆசனங்கள் கிடைக்கப்பெற்ற நிலையில், குறித்த ஆசனங்களுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வது தொடர்பான கலந்துரையாடல் தற்போதைய நிலையில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர் பட்டியல் ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், குறித்த பெயர் பட்டியலில் எவ்வித உண்மையும் இல்லை என கட்சியின் பிரதிநிதியொருவர் அததெரணவிற்கு தெரிவித்திருந்தார்.

Related posts

மீள்குடியேற்ற செயலணி ஊடாக இடம்பெயர்ந்தோர்,பாதிக்கப்பட்டோர் தகவல் திரட்டல்

wpengine

மன்னாரில் 1ஆம் திகதி மரநடுகை வடமாகாண அமைச்சர் சிவநேசன்

wpengine

இன்று முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஊரடங்குச் சட்டம்

wpengine