Breaking
Sun. Nov 24th, 2024

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலவச வாகன அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதை நிறுத்தி, பொது போக்குவரத்துச் சேவைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.


அம்பாந்தோட்டையில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்திலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.


மேலும் அவர் தெரிவிக்கையில்,


எமது நாட்டில் தேசிய வருமானத்திலிருந்து பில்லியன் கணக்கான ரூபா நிதி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாகனங்கள் கொள்வனவு செய்வதற்கான அனுமதிப்பத்திரங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றது. இதன் காரணமாக பாதிக்கப்படுவது நாட்டு மக்களே.
பொதுப்போக்குவரத்தை கவர்ச்சிகரமான சேவையாக மேம்படுத்துவதன் மூலம், செலவுகளைக் கட்டுப்படுத்த முடியும்.


அத்தோடு, பஸ்களில் உரத்த இசை நிறுத்தப்பட்டுள்ளது. ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இந்தத் திட்டம் தொடர்ந்து செயற்படுத்தப்படும். ஆசன எண்ணிக்கைக்கு அமைய பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்வது பொதுவான சட்டமாக மாற்றப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *