Breaking
Sun. Nov 24th, 2024

இந்த நாட்டில் ஜனநாயக அரசா அல்லது பொலிஸாரின் அரசா செயற்படுகிறது?

(தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஹூல் எழுதிய கட்டுரையில் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் வெளிவந்த கருத்துக்களின் தொகுப்பு)

இந்த நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கும், ஜனநாயக நிறுவனங்களை ஆதரிப்பதற்காகவுமே எங்களிடம் காவல்துறை உள்ளது. துரதிஷ்டவசமாக, காவல்துறையினர், அதிகாரத்துடன் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தின் கைகளில் உள்ள ஒரு கருவிபோல் ஆபத்தான அறிகுறிகள் காணப்படுகின்றன. இது நமது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பது போல, இது ஒரு மிகவும் கவலைக்கிடமானதொரு குற்றச்சாட்டாகவுமுள்ளது.

அத்தோடு, அதிகாரத்தில் உள்ள அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றவர்கள் தொடர்பான குற்றச் செயல்கள் குறித்து, அவர்களுக்கு எதிராக எந்தவித விசாரணையும் நடைபெறவில்லை என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. பின்னர், அரசாங்கம் மாற்றமடைந்ததுடன், நீண்டகாலமாக மறந்துபோன (செயலற்ற நிலையில்) நிலையில் காணப்பட்ட வழக்குகளில் திடீர் ஆர்வம் ஏற்பட்டுள்ளதனை காண முடிகிறது.

ஏதாவது குற்றச் செயலுடன் தொடர்பான சந்தேக நபர்கள், தெளிவான விசாரணையின் பின்னர் காவல்துறையினரால் விடுவிக்கப்பட்டுள்ளார்களா? அல்லது புதிய அரசாங்கம் கடந்த காலத்தில் நடைபெற்றதாக கருதப்படும் ஏதாவது குற்றச்செயல் தொடர்பாக, ஒருவரை திடீரென்று விசாரித்து அவருக்கு தண்டனை வழங்குவதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்ததா? அல்லது உண்மையில் ஒரு குற்றம் நடந்துள்ளது என்பது தொடர்பான ஆதாரங்கள் கண்டு பிடிக்கபட்டுள்ளதா? அல்லது காவல்துறையினர் விசாரணைகளினை அடக்கி மற்றும் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையான விசாரணை ஆரம்பிக்கப்பட்டு நடைபெறுகிறதா? என்பதை நாங்கள் ஒரு பார்வையாளராக இருந்துகொண்டு பார்க்கின்ற பொழுது, அதனை ஒருபோதும் உறுதிப்படுத்த முடியாமலுள்ளது.

இத்தகைய நிலை ஜனநாயகத்திற்கு ஆபத்தானது மட்டுமல்லாமல், ஒர் அரசியல் கருவியாக காவல்துறை பயன்படுத்தப்படுவதாக, காவல்துறை மீது குற்றச்சாட்டு உள்ளது.

தேர்தல் காலம் என்பது மிகவும் வேறுபட்டதாகும். ஒரு அரசியல்வாதி மீதான விசாரணைகள் தோற்றத்தில் முடிவாக்கப்பட்டு, அவர் நிரபராதி என தெளிவாக்கப்பட்டு இருக்கின்றதொரு நிலையில், தேர்தல்களின் போது திடீரென விசாரணை புத்துயிர் பெறுவதும், அவ்விசாரணை குறிப்பிட்ட எதிர்க்கட்சி அரசியல்வாதியின் பெயரை களங்கப்படுத்துவதற்கும், தேர்தலில் அவரை தோல்வியடையச் செய்யும் ஒரு முயற்சியாகவும், ஒரு பெரிய சந்தேகத்திற்குரிய விடயமாகவும் இவ்வாறான திடீர் விசாரணைகள் பார்க்கப்படுகின்றன.

பத்தொன்பதாம் திருத்தம், தேர்தல் ஆணையாளர் மற்றும் தேர்தல் ஆணையாளரின் இணை நிறுவனமான தேர்தல் ஆணையகமும், ஜனநாயகம் மீதான இந்த தாக்குதலை மிகவும் கவனத்தில் கொண்டுள்ளனர்.

தேர்தல் காலங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் போது, நாங்கள் நியாயமான முறையில் அந்த விசாரணைக்கான காரணங்களை சந்தேகிக்கின்றோம். அதனால் நாங்கள் குறிப்பிட்ட காலப்பகுதியில் (தேர்தல் காலப்பகுதியில்) மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளினை வாக்குப்பதிவு (தேர்தல்) முடியும் வரை ஒத்திவைக்குமாறு பொலிசாரை கேட்டுக்கொண்டுள்ளோம்.

இன்று, நீண்டகாலமாக இருந்து வந்த வழக்குகள், தேர்தல் காலத்தின் போது கைவிடப்படுவதை எங்களால் காண முடிகிறது. உதாரணமாக, டிரான் அலெஸ் தொடர்பான ஒரு வழக்கில் ஒரு சாட்சி, புகைப்பட நகல்களைப் பயன்படுத்தி, ஆதாரங்களை வழங்க இயலாமையை காரணம் காட்டி வெளியேறியுள்ளார் .

மற்றொரு உதாரணம், சமீபத்தில் இறந்த ஒரு சட்ட மருத்துவ அதிகாரியின் பிரதான சந்தேக நபராக, அவரை பெயரிடுவது நிகழ்கின்ற அதேசமயம், வசீம் தாஜுதீனின் உண்மையான கொலை செய்த மற்றவர்கள் இருக்கும்போதே, இந்த விடயமானது (வசீம் தாஜுதீனின் வழக்கானது) மூடப்பட்டும் உள்ளது.

தேர்தல் ஆணையகம், இந்த விசாரணைகள் தேர்தல் செயற்பாடுகளில் ஏற்படுத்துகின்ற வெகுவான தலையீட்டினை உணர்ந்ததன் பலனாக, நடைபெறவுள்ள எந்தவொரு தேர்தல் முடிவடையும் வரையில், குறிப்பிட்டவர்கள் மீதான விசாரணைகள் ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று ஆணையகம் தொடர்ந்து பொலிசாரை கேட்டுக்கொண்டுள்ளது.

வாக்காளர்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்தலினூடாக தேர்ந்தெடுப்பதற்கு முன்பு, அவர்கள் தேர்ந்தெடுக்கப் போகின்ற பிரதிநிதிகள் தொடர்பாக, தெரிந்துகொள்வதற்கு உரிமை உண்டு என்று வாதிடவும் முடியும்.

எவ்வாறாயினும், பல மாதங்களாக அல்லது பல வருடங்களாக செயலற்ற நிலையில் இருந்த வழக்குகள், தேர்தல்களின் போது புத்துயிர் பெறுவதும், அதற்கான காரணங்கள் வெளிப்படையாக அரசியலாகும் என்பதோடு, இது விடயத்தில் நாம் தலையீட வேண்டியது மிகவும் அவசரமானதாக இருக்கின்றது.

பல ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான மின்னல் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் திரு.ஸ்ரீ ரங்கா, திடீரென ஒரு பயங்கர விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்டபோது, அது உள்ளூராட்சி தேர்தல் காலமாக இருந்தமையால், தேர்தல் முடிவடையும் வரையில் அவர் மீதான விசாரணையினை ஒத்திவைக்கும்படி, தேர்தல் ஆணையகம் காவல்துறையினரைக் கேட்டுக்கொண்டது.

காவல்துறை அதை நன்றியுடன் மதித்து, செயலாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேபோல், நாமல் ராஜபக்ஷ மற்றும் சரண குணவர்தன ஆகியோர் தொடர்பாக நீண்டகாலமாக செயலற்ற நிலையில் காணப்பட்ட வழக்குகள், ஒரு தேர்தல் காலத்தின் போது புத்துயிர் பெற்றபோது, அவர்கள் மீதான விசாரணைகள் தொடர்பிலும் தேர்தல் ஆணையகம் தலையிட்டு, அவர்கள் மீதான விசாரணைகளினை ஒத்திவைக்குமாறு நாங்கள் காவல்துறையினை கேட்டுக்கொண்ட போது, எமது கோரிக்கை காவல் துறையினரால் மதிக்கப்பட்டது.

21 ஏப்ரல் 2019 அன்று நடைபெற்ற சோகமான நிகழ்வுகளுடன், ரிஷாட் பதியுதீன் இணைக்கப்பட்டுள்ளாரா அல்லது இல்லையா? என்பது குறித்து, இன்று எங்களிடம் ஓரு விசாரணை உள்ளது. ஆனால் குறிப்பிட்ட நிகழ்வு நடைபெற்று 15 மாதங்களுக்குப் பிறகு, பொதுத் தேர்தல் வாக்கெடுப்புக்கு இன்னும் வெறும் 2 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், ஏன் இந்த விசாரணை தொடங்கப்படுகின்றது? 15 மாதங்கள் காத்திருந்த காவல் துறையினர், ஏன் தேர்தல் முடிவடைய இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் முடியும் வரையில் காவல்துறையினர் காத்திருக்க முடியாது.

இதனை கருத்திற்கொண்டு, தேர்தல் ஆணைக்குழுவானது ஒரு வலுவான மற்றும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஏகமானதாக உடன்பட்டுக்கொண்டதன் பிரகாரம், நாம் ஒரு கடிதத்தினூடாக தேர்தல் முடியும் வரை, குறிப்பிட்ட விசாரணையினை ஒத்திவைக்குமாறு கேட்டு, பொலிஸ் மா அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளோம். ஆயினும் கூட, குற்ற புலனாய்வு பிரிவினர் தொடர்ச்சியாக திரு.ரிஷாட் பதியுதீனை குற்ற புலனாய்வு பிரிவு தலைமையகத்திற்கு அறிக்கை செய்யுமாறு கேட்டுக்கொண்ட வண்ணமுள்ளனர்.

பொலிஸாரின் பலத்த தலையீடு இது விடயத்தில் இருப்பது போல் எமது ஆணைக்குழுவானது கருதியதால், குறிப்பிட்ட விடயத்தினை 2020 ஜூலை 17 அன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் பங்குபற்றியிருந்த கூட்டத்தில், எமது ஆணைக்குழு இந்த விடயத்தினை சபையில் எழுப்பியிருந்தது.

மேலும், இந்த கூட்டத்தில் திரு. பசில் ராஜபக்ஷ உட்பட பல உயர்மட்ட அரசியல்வாதிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்ட விடயம் தொடர்பில் மேற்கொண்ட நிலைப்பாடானது சரியானது என்று, கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏகமனதாக ஒப்புக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து, நாங்கள் மீண்டும் பொலிசாருக்கு இது விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கக் கோரி கடிதம் எழுதியிருந்தோம். ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) கூட, திரு. ரிஷாட் பதியுதீன் அம்பாறையில், தேர்தல் பரப்புரைகளில் கலந்து கொள்ளவிருந்த நிலைமையிலும், அடுத்த தினமான திங்கட்கிழமை (20) குற்றப் புலனாய்வு தலைமையகத்திற்கு வருகை தந்து, வாக்குமூலம் வழங்க வேண்டும் என, குற்ற புலனாய்வுப் பிரிவினர் திரு. ரிஷாட் பதியுதீனை கேட்டுக் கொண்டதாக என்னால் அறியக்கிடைத்தது.

சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலுக்கான நமது ஜனநாயகத்தினையும் உரிமையையினையும் நாம் இழந்துவிட்டோமா?

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *