Breaking
Sun. Nov 24th, 2024

பசில் ராஜபக்ச மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆகியோருக்கு இடையில் ஒப்பந்தம் செய்துகொண்டதற்கு நானே சாட்சி என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற வேட்பாளர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.


வத்தளை பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,


“பசில் ராஜபக்ஷவும் நானும் ஒரு வகுப்பு நண்பர்கள், கடந்த யுத்த கால சூழலில் நாமும் அவரும் பல விடயங்களை பேசுவோம். நான் இராணுவத் தளபதியாக கடமையாற்றிய காலத்தில் பசில் ராஜபக்ஷவுடன் பேசுவதுண்டு.


அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் பொதுத் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை நிறுத்த பிரபாகரனிடம் பேசிவிட்டோம், அவர் இணக்கம் தெரிவித்துள்ளார் என என்னிடம் பசில் கூறினார்.


பசில், பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்துகொண்டதற்கு நானே சாட்சி, தேர்தலில் தமிழர்கள் வாக்கை நிறுத்துவதற்கு பிரபாகரம் இணங்கியதற்கு பிரபாகருக்கும் கடல் புலிகளுக்கும் அதி நவீன படகுகளை பெற்றுக்கொடுக்க தாம் இணக்கம் தெரிவித்ததாக பசில் என்னிடம் கூறினார்.


அதுமட்டுமல்ல இந்த பேச்சுவார்த்தைகளில் அமரர் தொண்டமானும் இருந்ததாக என்னிடம் கூறினார்.


நாம் விடுதலைப்புலிகளுக்கு எதிராக ஆயுத போராட்டத்தை முன்னெடுத்து எமது தமிழர்களை மீட்க வேண்டும் என்பதற்காக போராடிகொண்டிருந்த வேளையில் ராஜபஷக்கள் புலிகளுடன் ஒப்பந்தங்களை செய்தி கொண்டிருந்தனர்.


பிரபாகரனை துரோகி எனக் கூற அச்சத்துடன் இருந்தனர், பிரபாகரனை மதிப்புக்குரிய பிரபாகரன் என்றே இவர்கள் கூறினார்கள். அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005ம் ஆண்டு ஆற்றிய உரையை எடுத்துப்பாருங்கள்.


அதில் அவர் அவ்வாறே கூறினார். இன்று யுத்தம் முடிந்துவிட்டதுடன், பிரபாகரன் இறந்த பின்னர் வீரர்கள் போன்று பேசிக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர்.


இந்த அழிவிற்கும், பயங்கரவாத செயற்பாடுகளுக்கும் ஒரு விதத்தில் ஆட்சியாளகள் காரணம் என்பதே உண்மையாகும். பல பொதுமக்கள் இறந்தமைக்கும், அழிவுகளை சந்திக்கவும் ஆட்சியாளர்களும் பொறுப்புக் கூற வேண்டும்.


இந்த தேர்தலில் மீண்டும் ராஜபக்ஷக்கள் வெற்றின்பெற்றால் மீண்டும் வெள்ளைவேன் கடத்தல்,கப்பம் பெறல், கொலைகள், கொள்ளைகள் உருவாகும்.
எவரும் எதுவும் கேட்க முடியாது என்ற நிலைமை உருவாகும். ஆகவே இன்னொரு நாசகார ஆட்சிக்கு மக்கள் இடமளித்துவிட வேண்டாம்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *