கொரோனா பரவல் காரணமாக நாட்டில் மீண்டும் ஊரடங்கு சட்டத்தை அமுல் செய்வது குறித்து இது வரையிலும் தீர்மானிக்கவில்லை என பொலிஸார் தெரிவத்துள்ளனர்.
எனினும், நாட்டில் கொரோனா தொற்றாளர்கனின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தால் அந்த தீர்மானத்தில் மாற்றம் ஏற்படக் கூடும் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர், “நாடுபூராகவும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் இதுவரையில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை.
தற்போது கொரோனா வைரஸ் பரவல் தலைத்தூக்கியுள்ள பகுதிகளிலும் இந்த சட்டத்தை அமுல்படுத்துவதா? என்பது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை.
தற்போது நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வரும் பகுதிகளிலும் , அந்த நபர்களுடன் தொடர்புக் கொண்ட நபர்களையும் கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஊரடங்கு தொடர்பில் இன்னமும் அவதானம் செலுத்தப்படவில்லை. இருந்தபோதிலும் வைரஸ் தொற்றளர்கள் மேலும் அதிகமாக கண்டறியப்பட்டால் இந்த தீர்மானத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கின்றது” என கூறியுள்ளார்.