Breaking
Sun. Nov 24th, 2024

அரச உத்தியோகத்தர்கள் மீது அரசாங்கம் அக்கறையின்றி செயற்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டிய ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு தகுந்த பதிலடியை அரச உத்தியோகத்தர்கள் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.


ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,


அரச ஊழியர்களின் நலன் கருதி நல்லாட்சி அரசாங்கம் பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்திருந்தது. அரச சேவையாளர்களின் சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாவால் ஆட்சியமைத்து ஒருமாத காலத்திற்குள் அதனை செய்தும் காண்பித்திருந்தோம்.


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முன்னைய ஆட்சிக்காலங்களில் அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை 2500 ரூபாவால் அதிகரிப்பதாக தெரிவித்து வந்த போதிலும் , அதனை நிறைவேற்றவில்லை.
இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் அங்கவீனமடைந்துள்ள இராணுவத்தினருக்கும் நல்லாட்சி அரசாங்கத்திலே பல்வேறு நலன்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டது. ஜனாதிபதி தேர்தல் பிரசார காலங்களில் அங்கவீனமடைந்துள்ள இராணுவத்தினரை பயன்படுத்தி போராட்டங்களை கூட நடத்தி வெற்றிப் பெற்றவர்கள். ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஏதாவது நடவடிக்கை எடுத்தார்களா?


அரச நிர்வாகப்பிரிவினருக்கு பெரிதும் அளுத்தத்தை ஏற்படுத்தியுள்ள அரசாங்கத்தினர் மீது அரச ஊழியர்கள் தகுந்த பதிலடியை கொடுக்க வேண்டும். கொவிட் -19 வைரஸ் பரவலை காரணங்காட்டி அரச ஊழியர்களின் சம்பளத்தையும் கைப்பற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.

எமது ஆட்சியில் நாங்கள் மின்சாரம் மற்றும் நீருக்கான கட்டணங்களை குறைக்க நடவடிக்கை எடுத்திருந்தோம் , ஒளடதங்களின் விலை , எரிபொருள் விலை என்பவற்றை குறைக்க நடவடிக்கை எடுத்திருந்தோம்.


ஒரு வருடத்திற்கான மின் கட்டணத்தை இரு மாதங்களிலே பெற்றுக் கொள்ள அரசாங்கம் முயற்சிக்கின்றது. இந்நிலையில் தபாற் மூல வாக்களிப்புகள் எதிர்வரும் வாரங்களில் இடம்பெறுகின்றது.

இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு அரச ஊழியர்கள் தகுந்த பதிலடியை கொடுக்கும் வகையில் வாக்களியுங்கள்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *