வவுனியா இலங்கை போக்குவரத்து சாலையில் 400 லீற்றர் டீசல் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் மற்றும் புலனாய்வுத்துறையினர் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொரோனா தொற்று ஏற்பட்ட காலப்பகுதியில் நாடாளாவிய ரீதியாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டு நாட்டில் ஊரடங்குச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட காலப்பகுதியில் பேரூந்துகளுக்கு டீசல் பெற்றுக் கொள்ளப்பட்டமை நேற்று முன்தினம் தெரியவந்துள்ளது.
இதையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பொலிஸார் புலனாய்வுத்துறையினருடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா இலங்கை போக்குவரத்து சாலை முகாமையாளர் ஷாகீர் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த இரண்டு தினங்களாக இ.போ.ச பேரூந்துகள் உள்ளூர் சேவைகள் மேற்கொள்ளப்படவில்லை.
இதனால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கிவருதாகவும் வேலைக்கு செல்லும் இளைஞர்கள் , யுவதிகள் இதனால் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
நிதி மோசடியில் ஈடுபட்ட நடத்துனர்கள், சாரதிகள் சிலர் சேவையிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் சேவைகளுக்கும் இடைவெளி ஏற்பட்டுள்ளதுடன் அவர்கள் மீது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது .
அத்துடன் யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றிற்கு செல்வதற்கு பல சாரதிகள் நடத்துனர்கள் நேற்று முன்தினம் விடுமுறை பெற்று சென்ற காரணத்தினால் உள்ளூர் பேரூந்து சேவைகளை மேற்கொள்ள முடியவில்லை என்று மேலும் தெரிவித்துள்ளார்.