சூரியனின் ஒளியை உள்ளங்கையால் மறைத்திட முடியாது. அ.இ.ம.கா தலைவர் றிஷாதின் தலைமைத்துவ ஆற்றல் அபரிதமானது. அது இன்று யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாத நிலையை அடைந்துள்ளது. மு.காவின் தலைவர் ஹக்கீமே அ.இ.ம.காவின் தலைவர் றிஷாதை இலங்கை முஸ்லிம் மக்களின் தலைவராக, தன் ஆதரவாளர்களுக்கு மத்தியில் பிரகடனம் செய்துள்ளார்.
அவர் கூறியது:
” இன்று இலங்கை முஸ்லிம்களிடையே றிஷாத் பதியூதீனுக்கு தலைமை அஸ்தஸ்து என்ற பார்வை எல்லோர் மத்தியிலும் இருக்கின்றது” என்பதாகும்.
இது சாதாரணமாக நோக்கப்பட வேண்டிய விடயமல்ல.
சில வருடங்கள் முன்பு அ.இ.ம.கா தலைவர் றிஷாத் ஹக்கீமை இணைந்து செயற்பட அழைத்திருந்தார். எனது காலில் விழுந்து சீட்டு வாங்கிய உம்மோடு நான் இணைவதா என, அன்று இறுமாப்புடன் பேசிய ஹக்கீமே, இன்று அ.இ.ம.காவின் தலைவர் றிஷாதை தன் ஆதரவாளர்களுக்கு மத்தியிலேயே தலைவராக பிரகடனப்படுத்தியுள்ளார். இகழ்ந்தவரை அவரது வாயாலேயே புகழ வைத்துள்ளார். இதுவே அ.இ.ம.கா தலைவர் றிஷாதின் தலைமைத்துவ ஆற்றல்.
இரு கட்சி ஆதரவாளர்களும் கலந்து கொண்ட ஒரு பொது நிகழ்வில் ஹக்கீம் இவ்வாறு கூறியிருந்தால், ஒரு சம்பிரதாயத்துக்காக கூறியிருக்கிறார் என்ற கோணத்தில் நோக்குவதை பற்றி சிந்திக்க முடியும். தன் ஆதரவாளர்களுக்கு மத்தியில், அ.இ.ம.கா தலைவர் றிஷாத் சார்ந்தோர் யாருமே இல்லாத போது ஏன் கூற வேண்டும். இது அ.இ.ம.கா தலைவரின் அபரிதமான ஆளுமையில் சிக்குண்ட மு.கா தலைவர் அவர் பற்றி பேசும் போது, தன் மனதில் இருந்ததை போட்டு உடைத்துவிட்டார்.
குறித்த நிகழ்வில் மு.காவின் தலைவர் ஹக்கீம் குழப்பகரமான மனோ நிலையில் இருந்திருந்திருந்தார். அவர் பேச ஆரம்பிக்கும் போது, தான் எங்கு பேசப் போகிறோம் ( வன்னியில் ) என்பதை மறந்து தராசு சின்னத்தில் ( புத்தளத்திலேயே தராசு சின்னம் ) போட்டியிடும் வேட்பாளர் என ஹுனைஸை விழித்திருந்தார். அதனை பலர் சுட்டிக்காட்டிய போதும், அதனை உணர்ந்து சுதாகரிக்க ஹக்கீமுக்கு ஒரு குறித்த நேரம் எடுத்திருந்தது. குழப்பமான நிலையில் மனதில் ஆள பதிந்திருப்பது வெளிப்படும். அதுவே இங்கு நடந்தது.
மு.கா தலைவர் ஹக்கீம் அ.இ.ம.காவின் தலைவர் றிஷாதை சிலரே தலைவராக பார்க்கின்றார்கள் என கூறியிருந்தாலும் அக் கருத்தை பெரிதாக தூக்கி பிடிக்க வேண்டிய அவசியமில்லை. ” அனைவரும் ” நோக்குகிறார்கள் என கூறியிருப்பதால், தானும் அவரை தலைவராக ஏற்கிறேன் என அவர் கூறியிருப்பதாகவே பொருள் எடுக்க வேண்டியுள்ளது.
இதன் பிற்பாடு அ.இ.ம.கா தலைவரின் தலைமைத்துவத்தை, தலைமைத்துவ ஆற்றலை யாருமே கேள்விக்குட்படுத்த முடியாது. குறிப்பாக மு.கா ஆதரவாளர்கள்.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.