பிரதான செய்திகள்

கஞ்சிபானி இம்ரான் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூடத்தில் இருந்து அலைபேசி மற்றும் சிம் அட்டை

கஞ்சிபானி இம்ரான் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூடத்தில் இருந்து அலைபேசி மற்றும் சிம் அட்டை உள்ளிட்ட சில பொருட்கள் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புஸ்ஸ சிறைச்சாலை அதிகாரிகள்  மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இணைந்து  விசேட தேடுதல் நடவடிக்கையில் நேற்று (01) ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது காஞ்சிபனி இம்ரான் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூடத்தில் இருந்து அன்ரோய்ட் ரக அலைபேசி மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சிம் அட்டைகள் இரண்டும்  அலைபேசி சார்ஜரும் மீட்கப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கடந்த காலங்களிலும் கஞ்சிபானி இம்ரான் தடுத்து வைக்கப்பட்ட சிறைக்கூடத்தில் இருந்து அலைபேசி உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கிழக்கு முஸ்லிம் தனி மாகாணம்! மு.கா.கட்சியின் கையாலாகா தனமா?

wpengine

சின்னங்கள் மாறினாலும் எண்ணங்கள் மாறாது! மக்களை ஏமாற்றும் ஹக்கீம்

wpengine

மக்கள் கண்கானிப்பு இல்லாத இடங்களில் அதிகமாக ஊழல்- முதலமைச்சர்

wpengine