பிரதான செய்திகள்

வாக்களிப்பு வீதத்தை குறைப்பதற்காக தேர்தல் ஆணைக்குழு, மேற்குலக நாடுகளின் ஒப்பந்தம்

இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பு வீதத்தை குறைப்பதற்காக தேர்தல் ஆணைக்குழு, மேற்குலக நாடுகளின் தூதரகங்களிடம் ஒப்பந்தம் ஒன்றை பெற்று செயற்பட்டு வருகிறது என அமைச்சர் விமல் வீரவங்ச குற்றம் சுமத்தியுள்ளார்.


கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,


அளிக்கப்பட்ட வாக்குகளில் 80 வீதமான வாக்குகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வழங்கப்பட்டிருந்தாலும் வாக்களிப்பு வீதம் குறைந்துள்ளதன் மூலம் பெரும்பான்மையானவர்கள் வாக்களிக்கவில்லை என்ற கோஷத்தை அவர்கள் முன்னெடுத்துச் செல்லக் கூடும்.
தேர்தல் ஆணைக்குழுவினரும் மேற்குலக நாடுகளின் தாளத்திற்கு ஆடுகின்றனர்.


வரலாற்றில் முதல் முறையாக தேர்தல் அலுவலகத்தின் வேட்பாளரின் இலக்கத்தை காட்சிப்படுத்த முடியாது. புகைப்படங்களை வைக்க முடியாது.
கொரோனா காரணமாக பொதுக் கூட்டங்களும் நடத்தப்படுவதில்லை. இவற்றின் மூலம் மக்களின் வாக்களிக்கும் உற்சாகத்தை குறைக்க முயற்சித்து வருகின்றனர்.


இந்த விடயத்தை மகிந்த தேசப்பிரிய உட்பட தேர்தல் ஆணைக்குழுவினரே மேற்கொண்டு வருகின்றனர்.
எப்போதும் இல்லாத அளவுக்கு வாக்குகளை அளிப்பதற்காக வாக்குச் சாவடிகளுக்கு செல்லுமாறு நாங்கள் மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம் எனவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இரவில் மஹிந்தவை சந்தித்த இராஜாங்க அமைச்சர்

wpengine

அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் பிரதி அமைச்சர் அமீர் அலி இருவரும் செயற்திறன் மிக்கவர்கள்-அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் புகழாரம்.

wpengine

மன்னார் வந்துள்ள, வெளிநாட்டுப் பறவைகள்.!

Maash