Breaking
Mon. Apr 29th, 2024

வவுனியாவில் முகக்கவசம் இன்றி பயணிப்பவர்களுக்கு தண்டப்பணம் விதிக்கும் நடவடிக்கையில் வவுனியா பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.


எம்மை பாதுகாக்க தலைக்கவசம் அணிவது எவ்வாறு கட்டாயம் ஆக்கப்பட்டதோ அதே போன்று எம்மையும் மற்றவர்களையும் கோவிட் – 19 வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பதற்கு முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


இதன் அடிப்படையில் முகக்கவசம் அணியாது வீதிகளில் செல்பவர்களுக்கு தண்டப்பணம் விதிக்கப்படுகின்றது.


குறிப்பாக இன்று (27) முகக்கவசம் அணியாது மோட்டார் சைக்கில் சென்றவர்களுக்கு தலைக்கவசம் அணியவில்லை என்ற குற்றச்சாட்டில் தண்டப் பத்திரமும் முகக்கவசம் அணியாது வாகனங்களில் செல்பவர்களுக்கு ஆசனப்பட்டி அணியவில்லை என்ற குற்றசாட்டிலும் தண்டப் பத்திரம் வழங்கப்படுகின்றது.


நாளை முதல் முகக் கவசங்களை அணியாதவர்கள் 14 நாட்களுக்கு சுயதனிமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *