உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

எண்ணெய் பொருளாதாரத்திலிருந்து விலகி நாட்டை சீர்திருத்த சவுதி ஒப்புதல்

எண்ணெய் வளம் சார்ந்த பொருளாதாரத்திலிருந்து விலகி, நாட்டின் பொருளாதாரத்தை சீர்திருத்தும் திட்டங்களுக்கு சவுதி அரேபிய அரசு ஒப்புதலளித்துள்ளது.

சவுதி அரேபியாவின் பொருளாதாரத்தை நவீனப்படுத்தி விரிவுபடுத்த முன்வைக்கப்பட்ட திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததன் மூலம் அந்நாட்டின் பொருளாதாரம் பாரிய அளவில் சீர்திருத்தமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் எண்ணெய்ப் பொருளாதாரத்தை மட்டும் நம்பியிராது அடுத்த 15 ஆண்டுகளில் அத்தகைய சார்பு நிலையைக் குறைக்கத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

வரிகளை அதிகரித்து, அரச செலவீனங்களைக் குறைக்கவும் சவுதி அரேபிய அரசு விரும்புகிறது.

சவுதி அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள புதிய பொருளாதாரக் கொள்கையின்படி, உலகெங்கும் முதலீடு செய்யும் நோக்கில் இரண்டு ட்ரில்லியன் டொலர் நிதியம் உருவாக்கப்படவுள்ளது.

அரச எண்ணெய் நிறுவனமான அராம்கோவின் பங்குகளை விற்று அதன் மூலம் வரும் நிதியைக் கொண்டு இந்த நிதியத்திற்குத் தேவையான ஆதாரங்கள் ஏற்படுத்தப்படவுள்ளது.

எனினும், முதல் கட்டமாக அராம்கோவின் 5 சதவீத பங்குகளை மட்டுமே விற்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

ஜனவரியில் உள்ளுராட்சி தேர்தல் ரணில்

wpengine

வவுனியா சைவப்பிரகாசா ஆரம்ப பாடசாலைக்கு வாத்திய இசைக்கருவிகளை வழங்கிய மஸ்தான் (பா.உ)

wpengine

ஒரு கட்சியின் இரு மேதின கூட்டங்கள்

wpengine