Breaking
Sun. Nov 24th, 2024

இராணுவத்தில் ஓய்வு பெற்றவர்களை அரசின் உயர் பதவிக்கு அரசாங்கம் நியமிப்பதாக குற்றச்சாட்டுக்கள் படித்த மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட வேட்பாளருமான ஹீனைஸ் பாரூக் தெரிவித்துள்ளார்.


குறித்த செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட்டு கல்வியின் தகுதிக்கு ஏற்ப இலங்கையில் அரச சேவையில் உள்ளவர்களை பதவிகளுக்கு அமர்த்த வேண்டிய தேவை இந்த அரசாங்கத்திடம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.


மேலும் கூறுகையில்,
எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் ‘ஐக்கிய மக்கள் சக்தி’ கட்சியின் ஊடாக வன்னி மாவட்டத்தில் நான் போட்டியிடுகின்றேன்.


குறித்த கட்சியின் ஊடாக வன்னி மாவட்டத்தில் பிரதான வேட்பாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னால் அமைச்சர் றிஸாட் பதியுதீன் போட்டியிடுகின்றார்.


சிறிலங்கா முஸ்ஸிம் கட்சி சார்பாகவும் இரண்டு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள். மன்னார் மாவட்டம் சார்பாக சிறிலங்கா முஸ்ஸிம் காங்கிரஸ் சார்பில் நான் போட்டியிடுகின்றேன்.
இந்த முறை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் வன்னி மாவட்ட நிலவரத்தை பார்க்கின்ற போது ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு இம்முறை நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெறக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது.


வன்னி மாவட்டத்தில் 3 ஆசனங்களை டெலிபோன் சின்னத்தில் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியானது பெற்றுக் கொள்ளும்.
வன்னி மாவட்டத்தில் மக்கள் ஒன்று திரண்டு ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு வாக்களிக்கத் தயாராக இருக்கின்றார்கள்.


எமது தேர்தல் பிரச்சார முன்னெடுப்புக்களில் இளைஞர்கள் முன் நின்று செயற்படுகின்றனர். தற்போது நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பினால் மக்கள் பல்வேறு துயரங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.


அரசாங்கம் பொருட்களின் விலையேற்றத்தினை கருத்தில் கொண்டு அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் இன்று அரச சேவையில் இருக்கின்றவர்கள் உயர் பதவிக்கு செல்ல முடியத நிலை காணப்படுகின்றது. இராணுவத்தில் ஓய்வு பெற்றவர்களை அரசின் உயர் பதவிக்கு அரசாங்கம் நியமிப்பதாக குற்றச்சாட்டுக்கள் படித்த மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.


குறித்த செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட்டு கல்வியின் தகுதிக்கு ஏற்ப இலங்கையில் அரச சேவையில் உள்ளவர்களை பதவிகளுக்கு அமர்த்த வேண்டிய கட்டாய தேவையில் இந்த அரசாங்கம் இருக்கின்றது.
அதனை முன்னெடுக்க வேண்டும். வேலை இல்லா இளைஞர்களின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. வேலையில்லா பட்டதாரிகளின் தொகையும் அதிகரித்துச் செல்கின்றது.


இவர்களுக்கு அரச தொழில் வாய்ப்பை வழங்குவதற்கு அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது என்கின்ற உத்தரவாதத்தை மக்களுக்கு வழங்க வேண்டும் என நான் அரசாங்கத்தை வலியுறுத்தி கூறிக்கொள்ளுகின்றேன் என தெரிவித்துள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *