பரந்து விரிந்த ஆல மரத்தின் கீழ் சிறிய செடிகள் வளராது. மறைந்த தலைவர் அஷ்ரபின் ஆளுமையின் முன், அவருக்கு முன்னிருந்த பலமான அரசியல் வாதிகளே அழிந்தனர். ஒரு ஆளுமையை உலகம் ஏற்பதற்கு முன்பு, அவர் வாழும் பகுதியினர் அவரை ஏற்க வேண்டும். அதுவே அவருக்குள்ள மிகப் பெரிய பலம். அ.இ.ம.காவின் தலைவர் றிஷாடை பொறுத்த வரையில் இம் முறை வன்னியில் சிரமமின்றிய பெரு வெற்றியினை பெறுவார். இவ் வெற்றியை ஆராய்வது அவரது ஆளுமையை அறிந்து கொள்ள போதுமானதாகும்.
வன்னி மாவட்டம் மொத்தம் 5 ஆசனங்களை கொண்டது. வன்னி தமிழ் மக்களை அதிகம் கொண்ட ஒரு மாவட்டம். போனஸ் உட்பட முதல் மூன்று உறுப்பினர்களும் தமிழ் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவாதற்கான வாய்ப்பே உள்ளது. வன்னியின் நான்காவது ஆசனத்திலேயே முஸ்லிம் ஒருவர் தெரிவாக முடியும். அந்த நான்காவது ஆசனத்தில் அ.இ.ம.காவின் தலைவர் றிஷாத்தின் பெயர் எழுதியிருக்கும். இதுவே அவருடைய ஆளுமை. அவர் தாராபுரமெனும் சிறிய கிராமத்தில் பிறந்திருந்தாலும், பிரதேச வாதங்களை மீறிய ஆதரவைப் பெற்றுள்ளார். இது அவ்வாளவ இலகுவானதொன்றல்ல. இதுவே ஆளுமையின் வெளிப்பாடு.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் மு.கா தலைவர் ஹக்கீமை விட மு.அமைச்சர் ஹலீம் பத்தாயிரம் வாக்கை அதிகமாக பெற்றிருந்தார். ஹலீமின் வாக்கில் ஹக்கீம் நனைந்துள்ளார் என்பதே இது கூறும் செய்தி. ஹக்கீம் தெரிவானால் ஹலீமை விட முக்கிய அமைச்சுக்கள் வழங்கப்படும் என தெரிந்தும், அம் மக்கள் ஹக்கீமை விட ஹலீமையே கூடுதலாக ஆதரித்திருந்தனர். இது தான் மு.காவின் தலைவர் ஹக்கீமின் ஆளுமை. அதுவே அ.இ.ம.காவின் தலைவர் றிஷாதின் ஆளுமை.
இம் முறை வன்னியில் அ.இ.ம.காவும் மு.காவும் டெலிபோன் சின்னத்தில் தேர்தல் களம் கண்டுள்ளது. இம் முறை டெலிபோன் அணிக்கு இரு ஆசனம் கிடைக்கக் கூடிய வாய்ப்புமுள்ளது. அதில் முதலாவது ஆசனத்தில் அ.இ.ம.காவின் தலைவர் றிஷாதின் பெயரிருக்கும். ஏனையவர்கள் ஆகக் கூடியது அவருடைய வாக்கின் கால் பகுதியளவே பெற முடியும். இம் முறை வன்னியில் மிக இலகுவான வெற்றியை அ.இ.ம.காவின் தலைவர் றிஷாத் பெறுவார். அவர் வன்னியில் வெற்றிபெற பாரிய முயற்சி எடுக்க வேண்டிய அவசியமில்லை.
மயிலின் வன்னி களம் மிக இலகுவாக இருப்பதால், அ.இ.ம.காவின் தலைவர் றிஷாத் பெருந் தலையிடியின்றி ஏனைய பிரதேச பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். அ.இ.ம.காவின் தலைவர் றிஷாதின் பேச்சுக்கென்று முஸ்லிம்களிடையே தனி இடமுள்ளமை குறிப்பிடத்தக்கது. இம் முறை கண்டியில் மு.காவின் தலைவர் பெரும் சவாலை எதிர் நோக்கியுள்ளார் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. வன்னியில் மயிலின் வெற்றி இலகுவாக இருப்பது மயிலின் பிரச்சார நடவடிக்கைகளுக்கு மிகவும் சாதகமாக அமையப் போகிறது. இம் முறை அனைத்தும் மயிலுக்கு சாதகமாகவே உள்ளது.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.