பிரதான செய்திகள்

தபால் மூல வாக்களிப்பு 4நாட்கள்

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு 4 நாட்களுக்கு நடைபெறும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜுலை மாதம் 13, 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க கூறினார்.

தபால் மூல வாக்களிப்பு நடைமுறை மற்றும் பின்பற்றப்படவேண்டிய சுகாதார வழிமுறைகள் எதிர்காலத்தில் வௌியிடப்படும் என அவர் இதன்போது குறிப்பிட்டார்.

பொதுத் தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடைபெறும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (10) அறிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts

“பொன்சேகா ஒரு கழுதை” முடிந்தால் வெளியே வா? சமல் அழைப்பு

wpengine

150 உர மூட்டைகள் மீட்பு! விவசாய அதிகாரியும் கைது

wpengine

ஊழல் மோசடிகள் தொடர்பில் அரசாங்கம் மீது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

wpengine