கடந்த 6 வாரங்களில் அரசாங்கத்தின் வரிவருமானம் 120 பில்லியன் ரூபாய்களால் குறைந்திருந்தது.
திறைசேரியின் அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்திருந்தார்.
உள்நாட்டு இறைவரி திணைக்களம், ஸ்ரீலங்கா சுங்கம், குடிவரவுத் திணைக்களம், மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மற்றும் மதுவரித்திணைக்களம் என்பவற்றின் வருமானம் பாரியளவில் பாதிப்படைந்திருந்தது.
நாட்டின் நிலைமை இயல்புக்கு வந்ததும் இந்த வருமானத்தில் குறிப்பிட்டளவு வருமானத்தை திரட்டிக்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் சுங்கம் மற்றும் மதுவரி திணைக்களங்களுக்கு ஏற்பட்ட வருமான நட்டத்தை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியாது என்று திறைசேரியின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அரச பணியாளர்களுக்கான வேதனமான 8 பில்லியன் ரூபாவை திறைசேரி தமது சொந்த வரி வருமானத்திலேயே வழமையாக செலுத்திவருதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வருமானம் எரிபொருள் நுகர்வில் ஏற்பட்ட குறைவுக்காரணமாக 40வீதத்தினால் குறைந்துள்ளது.
மின்சாரசபையின் நாளாந்த வருமானம் வழமையான வருமானமான 450 மில்லியன் ரூபா 150 மில்லியன் ரூபாவாக குறைந்துள்ளது என்றும் திறைசேரியின் அதிகாரி தெரிவித்தார்.